எழுதியவர்: திருமதி சீதாலட்சுமி to இல்லம்
நினைப்பதெல்லாம் நடப்பதுவும் தெய்வத்தின் அருள். என் வேலைக்கு அரசு ஆணை கிடைக்கவும் எங்கள் குடும்பமே மகிழ்ந்தது. வெளியூரில் வேலை என்றாலும் வீட்டில் கலக்கம் இல்லை. அக்காலத்தில் ஓர் பெண்ணை வெளியூருக்கு அனுப்பி, தனியாக வசிக்க அனுமதி தருவது அபூர்வம்.
என் பயணம் தொடங்கும் முன்னர் சில விஷயங்களை முதலிலேயே கூறிவிட விரும்புகின்றேன். எழுதும் பொழுது, சிலரின் பெயர்கள், சில ஊர்களின் பெயர்கள் எழுதுவதைத் தவிர்த்திருக்கின்றேன். செய்திகள் முக்கியமே தவிர, அங்கே பெயர்கள் தேவையில்லை. நான் யாருடைய மனத்தையும் காயப் படுத்த விரும்பவில்லை. அதே நேரத்தில் தேவையான உண்மைகளும் தெரியப் படுத்த வேண்டும். என் அனுபவங்களைத் தெரிவிப்பது சமுதாயத்திற்கு நான் செய்யும் கடமையாக நினைக்கின்றேன். அடுத்தும் இன்னொரு தகவல். கூறப்படும் சம்பவங்கள், அவைகள் நிகழும் காலத்தைத் தயவு செய்து கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். அக்காலத்தில் நடந்தவைகளை இக்கால நடப்புகளுடன் ஒப்பு நோக்கி விமர்சனம் செய்வது பொருந்தாது. படிப்படியாக நேரும் மாறுதல்களையும் சொல்லிக் கொண்டு வருவேன்.
இப்பொழுது பயணத்தைத் தொடங்குகின்றேன்.
என் தந்தையுடன் ஊராட்சி அலுவலகம் சென்று வேலையில் சேர்ந்த கடிதம் அலுவலகத்தில் அளித்தேன். அதன் பின் ஓர் ஊழியர் என்னை அழைத்துக் கொண்டு ஓர் அறைக்குச் சென்று, அங்கிருந்த ஓர் நாற்காலியையும் காட்டி, “இதுதான் உங்கள் இடம்“ என்று கூறிவிட்டுச் சென்று விட்டார். அந்த இடத்தில் ஏற்கனவே உட்கார்ந்திருந்த ஒருவர் எழுந்து நின்று“ இதுதான் உங்களிடம். என் பெயர் பரமசிவம். சமூகக் கல்வியாளர்“ என்று கூறிவிட்டு, அந்த அறையில் இருந்த எல்லோரையும் அறிமுகம் செய்து வைத்தார். அத்துடன் அலுவலத்தின் பணியாளர்களின் அமைப்பையும் விளக்கினார்.. ஊரக வளர்ச்சி அதிகாரியின் கீழ், ஒவ்வொரு துறைக்கும் ஒரு விரிவாக்க அலுவலர் உண்டு. சமூகக் கல்விக்கு மட்டும் ஆண், பெண் என்ற இரு அலுவலகர்கள். நான் சேர்ந்த பணியின் பெயர் சமூகக்கல்வி விரிவாக்க அலுவலர் (பெண்). பரமசிவம் என்னிடம் நான் செய்ய வேண்டிய பணிகளைப்பற்றிக் கூறிக் கொண்டிருக்கும் பொழுது என் தந்தை மற்றவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். பரம சிவம் நகன்றவுடன் என் தந்தை அருகில் வந்து வெளியில் சென்று மாலையில் திரும்புவதாகக் கூறிவிட்டுச் சென்று விட்டார். அவருடன் கால்நடை அலுவலர் சரவணனும் சென்றார்.
சில நிமிடங்கள் கழிந்தன. பரமசிவமும், கூட்டுறவு அலுவலர் நடராஜனும் என் எதிரில் இரு நாற்காலிகளை இழுத்துப் போட்டுக் கொண்டு உட்கார்ந்தனர். ஏனோ அவர்கள் முகங்களைப் பார்க்கவும் நல்ல அபிப்பிராயம் தோன்றவில்லை. மெதுவாகப் பேச ஆரம்பித்தனர். “உங்களிடம் ஒரு முக்கிய செய்தி கூற வேண்டும். உங்கள் அப்பா போகட்டும் என்று காத்திருந்தோம். உங்களுக்கு அவசியம் தெரிந்திருக்க வேண்டும். நம் வட்டார வளர்ச்சி அதிகாரி பெண்கள் விஷயத்தில் மகா மோசம்..“என்று இழுத்தார் நடராஜன். எனக்கு அச்சம் வரவில்லை. ஏனோ செய்தியை நம்பத் தோன்றவில்லை. என் மவுனத்தைக் கண்ட பரமசிவம் பேச்சைத் தொடர்ந்தார், “உங்களுக்கு முன்னால் பத்மாவதி இருந்தார்கள். இந்த அதிகாரி எப்படியோ அவளைக் கெடுத்துவிட்டார். ஊர்க்காரங்க நோட்டீஸ் அடிச்சு கேவலப் படுத்திட்டாங்க. சுவத்திலும் அசிங்கமா எழுதிட்டாங்க. அது நம் பெரிய ஆபீஸ் வரை போய்த்தான் பத்மவைத் தூக்கிவிட்டார்கள். அந்த இடத்தில்தான் நீங்கள் வந்திருக்கின்றீர்கள். நம் ஆபீஸரிடம் கொஞ்சம்
ஜாக்கிரதையாக இருங்க.“
பரமசிவம் பேசப் பேச எனக்குள் நெருப்பு புகைய ஆரம்பித்தது. பயம் வருவதற்குப் பதிலாக எதிரில் அமர்ந்திருந்த இருவரையும் கெட்ட நோய்க்காரர்கள் போல் உணர்ந்தேன். பெண்னைப் பழிக்கின்றார்கள் பாவிகள் என்றுதான் நினைப்பு வந்தது. என்னிடம் ஒரு குறையுண்டு. பெண் விஷயத்தில் ஆண்கள் கெட்டவர்கள் என்ற எண்ணம். அப்படி எண்ண வைத்தது பிள்ளைப் பருவத்து அனுபவங்கள், நான் கிராமத்தில் கண்ட காட்சிகளே. குடும்பச் சண்டை தெருவில் நடக்கும். பெண்டாட்டி தலைமயிரைப் பிடித்து இழுத்து உதைப்பான். அவளோ ஓங்கிக் குரல் எழுப்பிக் கத்துவாள். அவனோ அவளை மிதிப்பான். தெருவில் அவள் துடித்துக் கொண்டிருக்கும் பொழுதே அவன் திட்டிக் கொண்டே சென்று விடுவான். இவள் தெருவில் புரண்டு அழுவாள். ஒன்றா, இரண்டா பல முறை தெருக்காட்சிகள் கண்டிருக்கின்றேன். விசாரித்ததில், அவனுக்கு ஒரு வப்பாட்டி (இப்பொழுது அது சின்ன வீடு) இருக்கிறாள். குடும்பத்தைக் கவனிப்பதில்லை. குடித்துவிட்டு எப்பொழுதாவது வருவான். இவளோ பொறுக்கமாட்டாமல் கத்துவாள். அவனோ அடிப்பான். பெண்டாட்டி அடித்து நான் பார்த்ததில்லை. அதனால் என் மனத்தில் ஆண்கள் பொல்லாதவர்கள் என்ற எண்னம் பதிந்துவிட்டது. நிறைய கதைகள் படித்த அனுபவத்தில் வம்புபற்றியும் தெரியும். என்முன் உட்கார்ந்திருந்தவர்கள் வம்பர்கள் என்று நினைத்தேன். அத்துடன் பணியாற்றும் பொழுது பெண்னின் மேல் எப்படிப்பட்ட சேற்றைவாரி வீசுவார்கள் என்பதையும் புரிந்து கொண்டேன். என் மவுனத்தைப் பார்த்த பரமசிவம் “பயப்படாதீர்கள், நாங்கள் இருக்கின்றோம். உங்களுக்குக் கஷ்டம் வராமல் பார்த்துக் கொள்வோம்“ என்றனர். அடிப்பதற்குக் கை பரபரவென ஊறியது. அடக்கிக் கொண்டு பேசாமல் இருந்தேன். அவர்கள் அறைக்கு வெளியில் போய்விட்டார்கள்.
அவர்கள் போனவுடன் விவசாய அலுவலகர் மாணிக்கம் வந்தார். “மேடம், இவர்கள் மோசமானவர்கள். பயப்படாதீர்கள். நம் அதிகாரி நல்லவர். இவர்களால்தான் கதைகட்டிவிடப் பட்டது. ஊர்க்காரனை சுவத்திலே எழுத வைத்ததும் நோட்டீஸ் அடிக்க வைத்ததும் இவங்கதான். மெட்ராஸ் ஆபீஸுக்கும் எழுதிப் போடவைத்தவங்க இவங்க தான். இவங்க கிட்டேதான் நீங்க ஜாக்கிரதையா இருக்கணும்.“ என்று மெதுவாக மாணிக்கம் பேசினார். ஒன்று மட்டும் உறுதியாகத் தெரிந்தது. பெண்மேல் எந்தப் பழியும் சுமத்துவார்கள், கேவலப் படுத்தப்படுவார்கள் என்பதை உணர்ந்தேன். இக்காலத்திலும் அரசியலில் வரும் பெண்கள் மேல் பழி சுமத்தப்படுவதைப் பார்க்கிறோம். அதே நேரத்தில் பழிப்பவர்களின் வாழ்க்கையைப் பார்த்தால் பரிசுத்தமாக இல்லை. முதல் நாள் அனுபவம் ஓர் அவல முழக்கம். இச்சூழ்நிலை எனக்கு ஆத்திரத்தைக் கிளப்பியது. என்னால் பொறுமையாக இருக்க முடியுமா? இல்லை விலகி ஓடக் கூடாது, ஒரு கை பார்க்கவேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டேன்.
மதியம் மூன்று மணிக்கு இரு பெண்கள் வந்தார்கள். ஒருத்தி கிராமசேவிகா. பெயர். மினாட்சி. இன்னொருத்தி இராட்டை கற்றுக் கொடுப்பவர். பெயர் லட்சுமி. இருவரும் வேலைகளைப் பற்றிப் பேசிவிட்டு மறுநாள் உள்ளூர் மாதர்சங்கம் போகலாம் என்றார்கள். திரும்பி வந்த என் தந்தை ஒரு செய்தியுடன் வந்திருந்தார். வெளியில் சென்றவர் வாடகைக்கு ஓர் வீடு பார்த்துவிட்டதாகவும், சில சாமான்களும் வாங்கி வைத்துவிட்டதாவும் கூறினார். எவ்வளவு சீக்கிரமாக தன் மகள் தனித்து வாழ, வேண்டிய வசதிகளைச் செய்துவிட்டார்! மாலையில் என் தந்தை, சரவணன், மீனாட்சி, லட்சுமி, எல்லோருடனும் புது வீட்டிற்குப் போனோம். சரவணன் வீடு இருந்த அதே தெருவில் வீடு. நீளமாக அமைந்திருந்தது. கழிவறை கொல்லைப்புரத்தில் கோடியில் இருந்தது. கிணற்றுத்தண்ணீர்தான். வீட்டில் மின்னிணைப்பு கிடையாது (மனக் குரல் பெரியவர் பேசியதை நினைவு படுத்தியது). ஒரு ஹரிக்கேன் விளக்கு. சரவணன் மனைவி வந்து அடுப்பு மூட்டி பால் காய்ச்சினார்கள். .விறகுடன், அல்லது விறகு இல்லாமல் இந்தச் சுள்ளிகள் வைத்து அடுப்பு மூட்டுவது கிராமத்து வழக்கம். சுள்ளிகள் பொறுக்கி கட்டாகக் கட்டி விற்பது ஓர் சிறு தொழில். அதுவும் வயலுக்கு அல்லது காட்டிற்கு வேலைக்குப் போய்விட்டு வரும் பொழுது பெண்கள் தலையில் சுள்ளிக் கட்டைச் சுமந்து கொண்டு வரிசையாய் வருவதைப் பார்க்கவே அழகு. பால் காய்ச்சி முடியவும் மற்ற சின்னச் சடங்குகளையும் முடித்து வீட்டை விட்டுப் புறப்பட்டோம். என் தந்தை வீட்டுச் சாவியை என்னிடம் கொடுத்ததார்.
குஞ்சுகள் இறக்கை வளர்ந்தவுடன் பறக்கச் சொல்லிக் கொடுத்து விண்னிற்கு அனுப்பும் தாய்ப் பறவைபோல் என் தந்தை இருந்தார். இனி நான் உலகில் தனியாக வலம் வர வேண்டும். பொறுப்புணர்வோடு இருக்க வேண்டும் என்ற எண்ணம் தலை தூக்கியது. கட்டுப்பாடுகளுடன் சுதந்திர வாழ்க்கை. ஒரு பெண்ணுக்கு உரிய வீடு கணவர் வீடு. ஆனால் அங்கே அவளுக்குக் கிடைப்பது கட்டுப்பாடுடன் கூடிய உரிமை. இஷ்டம் போல் சுதந்திரத்தைக் கையாண்டால் சுதந்திரம் பாழ்பட்டுவிடும். எதற்கும் ஒரு ஒழுங்கு வேண்டும். விண்ணிலே இருக்கும் கோள்களும், நட்சத்திரங்களும் கட்டுப்பாட்டை இழந்தால், பரந்து விரிந்து கிடக்கும் கடல் கட்டுப்படற்ற சுதந்திரம் விரும்பினால் என்ன நடக்கும்? சொல்லித் தெரிய வேண்டியதில்லை. உரிமையைக் காக்கக் கடமையில் அக்கறை வேண்டும்.
முதல் நாள் கசப்பு அனுபவம் என் உணர்வுகளைக் கொஞ்சம் அசைத்தாலும் சமாளித்துவிட்டேன். என் துணிவிற்கு பாதிப்பில்லை
மீண்டும் சந்திப்போம்.
Thursday, January 7, 2010
Wednesday, January 6, 2010
நினைவலைகள் - 2
எழுதியவர்: திருமதி சீதாலட்சுமி to இல்லம்
( தாமதம் காரணமாகச் சில வரிகள் எழுத வேண்டி வந்துவிட்டது. இது ஒரு சமுதாய வரலாறு. 100 ஆண்டுகள் செய்திதர நினைத்து ஆரம்பித்தேன். ஆனால் காலச் சக்கரத்தில் மனிதன் தோன்றிய காலம் வரை போய் வர வேண்டி வருகின்றது. மரபுச் செய்திகள் வரும். மனித வாழ்வின் மாற்றங்கள் பல கோணங்களில் காட்டப் படுகின்றன. தனி மனிதச் சாடல் கிடையாது. ஆனால் குறைகளைச் சுட்டிக் காட்டி இருக்கின்றேன். சாதனை புரிந்தவர்களின் பெயர்களை எழுதியுள்ளேன். இதிலும் நாயகி நானே. வரலாற்றுக்கு சான்றாக, சாட்சியாக வருகின்றேன். ஒரு முறையாவது எல்லோரும் படிக்க வேண்டுகின்றேன். வரிகளுக்கு மத்தியில் உண்மைகள் புதைந்திருக்கும். என் கடமையாய் நினைத்து எழுதியுள்ளேன். சமுதாயத்திற்கு நான் தரும் கடைசி காணிக்கை)
என் பயணம் புதிய பாதையில் செல்லப்போகும் அறிகுறிகள் தென்பட ஆரம்பித்தன. என் தந்தைக்கு,அவர் தலைவர் கர்மவீரர் காமராஜரைப் பார்க்கும் ஆவல் பிறந்துவிட்டது. சென்னைக்குப் போகும் பொழுது என்னையும் கூட்டிப் போனார். பெரியவரிடம் தன் மகள் பி.ஏ பட்டம் வாங்கியதையும், வாத்தியார் வேலைக்குப் போயிருப்பதையும் கூறினார் உடனே நடந்த உரையாடல்கள்தான் என் பயணத்தை மாற்றியது
“வாத்தியார் வேலைக்கு யாரும் வருவாங்க. கிராமத்துக்குப் போய் வேலை பாக்கச் சொல்லு.” என்று என் தந்தையிடம் கூறிய பெரியவர் என்னை நோக்கி,“ நிறைய கிராமத்துலே பள்ளிக்கூடம் இல்லே. இருந்தாலும் புள்ளங்களே சரியா அனுப்பறதில்லே. இன்னும் அப்பாவித்தனமா இருக்காங்க. படிச்சாத்தானே உலகம் போற போக்கு புரியும். நீ போய் இதெல்லாம் சொல்லணும். சரியான ரோடு கிடையாது. லைட்டு இல்லே (மின்இணைப்பு ), ஆஸ்பத்திரிகூட இல்லை. கிராமம் முன்னுக்கு வந்தாதான் நாடும் நல்லா இருக்கும். போவியா?” என்று என்னைக் கேட்டார். நான் சரியென்று தலையாட்டினேன். அது அவருக்கு திருப்தி தரவில்லை போலிருக்கின்றது. “என்ன தலையாட்டறே, கிராமத்துக்கு நடந்துதான் போகணும். நிறைய ஊருக்கு பஸ் கிடையாது. வெள்ளைத் துணி அழுக்காகுமேன்னு நினைக்கிறியா?” அவர் கேள்வியில் கொஞ்சம் கோபம் தொனித்தது.
நான் வாய் திறந்து பேசினேன்.“ நிச்சயமா போவேன். நீங்க சொன்னபடி அவங்க நல்லதுக்காக வேலை செய்வேன்“
அவர் முகத்தில் சிறு புன்னகை.
“கெட்டிக்காரி. புளச்சுப்பே“ என்றார் பெரியவர். அவர் ஆசிகளுடன் புறப்பட்டேன்.
சிலர்முன் சென்றால் பேச்சு வருவதில்லை. சிலரை அர்த்தமில்லாமல் பார்த்தவுடன் ஒதுங்க நினைக்கின்றோம். ஏதோ ஓர் காந்த அலைவரிசை மனிதர்களிடையே விருப்பு வெறுப்புகளைத் தோற்றுவிக்கும் போல் இருக்கின்றது. இந்த அனுபவம் பலமுறை எனக்குக் கிடைத்தது. என் தந்தையைப் பார்த்தேன். அவருக்குத்தான் மகள் பட்டம் வாங்கியதில் எவ்வளவு பெருமை?
அக்காலத்தில் ஒரு பெண் பட்டம் வாங்குவ்து வியப்புக்குரியதாக இருந்தது. தன் மகள் படித்த மகிழ்ச்சியைத் தன் தலைவனிடம் கூற ஒரு தொண்டன் நினைக்கின்றான். தலைவனும் அக்கறையுடன் கேட்டு, எதிர்கால நடவடிக்கைக்கும் அறிவுரை கூறுகின்றான். இங்கே மதிப்பு மட்டுமல்ல, தலைவன் தொண்டனுகிடையில் ஓர் பந்தமே இருக்கின்றது. அதனால்தான் அவர் பெருந்தலைவர் என்று அழைக்கப் படுகின்றார். நாட்டின் பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் வலிமை பெற்றதும் இந்தக் குணத்தாலேதான். கண்டிப்பு மிக்கவர். கோபக்காரர். ஆனால் கருணை காட்ட வேண்டிய நேரத்தில் அரவணைப்பவர். கிராமங்களை உயிராய் நேசித்தவர். நான் அரசியல்வாதியல்ல. தொண்டன் தலைவனைப் புகழ்வது பெரிதல்ல. எக்கட்சியையும் சாராதவர் மதிக்க வேண்டும். அவர்களிடமிருந்து புகழுரைகள் வரவேண்டும்.
ஊருக்கு வந்த பின் நாங்கள் யோசிக்க ஆரம்பித்தோம். எந்த வேலையைக் குறிப்பிட்டார் என்று அப்பொழுது தெரியவில்லை. ஆனால் சில நாட்களில் விடை கிடைத்தது. என் சக மாணவன் சுப்பையா செய்தித்தாள் ஒன்றை எடுத்து வந்தான். அதில் ஓர் விளம்பரம். வட்டார வளர்ச்சிப் பணிகளில் வேலை செய்ய பெண் ஊழியர்கள் தேவை என்று அறிவிக்கப்பட்டிருந்தது. கிராமங்களில் செய்யும் பணி. பெரியவர் கூறியது இதுவாகத்தான் இருக்கும் என்று புரிந்து கொண்டோம். உடனே நான் இந்த
வேலைக்கு மனுச் செய்தேன். பதிலும் சீக்கிரம் வந்தது. காந்தி கிராமத்தில் தேர்வு நடத்தப்படும். மூன்று நாட்கள் அங்கே இருக்க வேண்டும். தேர்வுக்குச் சென்றேன்.தேர்வுக்குச் செல்லும் முன் சோம சுந்தர பாரதியாரின் தம்பி ராஜாராம் அவர்களிடம் சிபாரிசுக் கடிதம் பெற்றுக் கொண்டேன்.
காந்தி கிராமச் சூழலே அமைதியாக இருந்தது. எங்களுக்குச் சில வேலைகள் கொடுத்துச் செய்யச் சொன்னார்கள். எங்கள் ஆர்வமும், செய்யும் தொழிலில் எங்கள் பங்கீட்டையும் மதிப்பிட்டார்கள். மறு நாள் எனக்குப் பிடித்தமாக இருந்தது. ஒரு தலைப்பைக் கொடுத்து பேசச் சொன்னார்கள். நான் பேச்சிலே கெட்டி. கைதட்டு வாங்கினேன். ஓர் திட்டம் கூறி அதைப் பாட்டாக எழுதிப் பாடச் சொன்னார்கள். சின்னவயதில் கவிதை எழுதியவள். சங்கீதம் முறைப்படி கற்றவள். ஆனாலும் சினிமா மெட்டில் பாட்டிசைத்து மீண்டும் கைதட்டு பெற்றேன்.
அடுத்து நாடகம். முதல் நாள் மாலையே சொல்லி இருந்தார்கள். கல்லூரி நாட்களில் விளையாட்டுகளுக்குக் கூடப் போகாமல் பாட்டு எழுதுவதும், நாடகம் கதை வசனம் எழுதுவதும், நான் எழுதிய நாடகத்திலே நடித்ததும் இப்பொழுது பயன்பட்டது. இப்பொழுது மட்டுமா? கலைவாணர் அரங்கில் கலைஞர் தலைமையில் நாடகம் போடும் வாய்ப்பே கிடைத்தது. கல்லூரியில் நான் எழுதிய ஓரங்க நாடகத்தில் கண்ணகியாக நடித்தேன். அதிலிருந்துஎங்கள் பிஷப் மேன்மைதகு ஆண்டவர் ரோச் அவர்கள் என்னைக் கண்ணகி என்றுதான் கூப்பிடுவார்.
காந்தி கிராமத்தில் என் நடிப்பு பாராட்டப் பட்டது. மூன்றாவது நேர்காணல். அங்கும் என்னால் அச்சமின்றி, தயக்கமின்றி பதில் சொல்ல முடிந்தது. என் தந்தையுடன் பல பெரியவர்களை என் பிள்ளைப் பருவத்தில் பார்த்ததும் பேசியதும்தான் என்னிடம் இப்படி ஓர் தன்னம்பிக்கையைத் தோற்றுவித்திருக்க வேண்டும். பிஞ்சிலே வளையாதது பின் வளைத்துப் பயனில்லை. சின்னப்பிள்ளைகளை அரவணைத்து அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டிய அம்மாக்கள் தொலைக் காட்சிக்கு முன் உட்கார்ந்திருப்பது குழந்தைகளைத் தனிமைப்படுத்திவிட்டது. இப்பொழுது வளரும் சூழல், ஊடகத்தாக்கம் இவைகளால் மனிதன் உருவாக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றான்.
என் தேர்வு முடியவும் நான் கொண்டு சென்றிருந்த சிபாரிசுக் கடிதம் கொடுத்தேன். அவர்கள் அதனைப் பிரித்துக் கூடப் பார்க்காமல் சொன்னது. “நாங்கள் இந்த வேலைக்கு எதிர்பார்க்கும் தகுதி உன்னிடம் இருக்கின்றது. சிபாரிசு பார்த்து திறமை இல்லாதவர்களை வேலைக்கு எடுத்தால் கிராமம் உருப்படுமா? . நீ கடிதம் கொண்டுவந்ததே தப்பு. கெட்டிக்காரப் பெண்ணாய் இருப்பதால் உனக்கு வேலை தருகின்றோம். இனி இப்படி செய்யதே” அப்பொழுது ஊரக வளர்ச்சித் துறைக்குத் மேலதிகாரியாக இருந்தவர், காந்தீயவாதி திரு வெங்கடாசலபதி அவர்கள். சரியான தலைமை. சிபாரிசும் குறுக்கு வழிதான். அதிகாரவர்க்கங்கள் உண்டாக்கிய சலுகைகளில் ஒன்றுதான் சிபாரிசும். வரலாற்றில் அதிகாரத்திற்கு ஆசைப்பட்டவர்களால் தீமைகள் ஒவ்வொன்றாக தோன்ற ஆரம்பித்தது. ஆனால் கால ஓட்டத்தில் கொஞ்சம் கொஞ்சமாக வளர ஆரம்பித்து விட்டது. இப்பொழுது பரவலாக்கப்பட்டிருக்கின்றது.
இப்பொழுது என்ன நடக்கின்றது? வேலைக்கு வேண்டிய முக்கியமான தகுதி, காசும், சிபாரிசுகளும். திறமையானவர்கள் ஒதுக்கப்பட்டால் நாட்டின் வளர்ச்சி எந்த அளவு பாதிக்கபடும் என்று வருங்கால சந்ததிகள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அறுவை சிகிச்சையின் பொழுது கத்திகூடச் சரியாகப் பிடிக்கத் தெரியாதவனுக்கு, சிபாரிசால் வெற்றி கொடுத்தால் மனித உயிர்களுக்கு உத்திரவாதம் கொடுக்க முடியுமா? உதரணத்திற்காக இன்னொன்றும் கூற விரும்புகின்றேன்.சில காரணங்களால் சில சலுகைகள் தருகின்றோம். அதிலும் தேர்ந்தெடுக்க குறைந்தது 70 மதிப்பெண் பெற வேண்டுமென்று ஓர் நடு நிலை நிர்ணயம் செய்தால்அந்த மதிப்பெண் பெற முயற்சிப்பான். அதைவிடுத்து 40 மதிப்பெண் போதும் என்று சிபாரிசு செய்தால் அவனுக்கும் படிப்பில் அக்கறை ஏற்படாது. எதிர்காலத்தில் கல்வித்தரம் உயர அக்காலத்திற்கேற்ப பல கோணங்களில் சிந்தித்து செயல் படவேண்டும்.
வேகமாக மாறிக் கொண்டுவரும் சூழ்நிலைகளில், பிள்ளைகள் அத்தனையும் தாண்டி சிறப்பாகப் படிக்கின்றார்கள். அமெரிக்காவில் புஷ் அவர்களும் ஒபாமா அவர்களும் கூட, தங்கள் நாட்டுப்பிள்ளைகளை நோக்கி இந்தியக் குழந்தைகளைப் போல் படியுங்கள் என்று சொல்கின்றார்கள்.
இந்தியா பெரிய நாடு. நம் நாட்டின் வளர்ச்சிக்குத் தரமான மனிதர்களை உருவாக்க வேண்டிய கடமை ஒவ்வொரு வருக்கும் உண்டு. படிப்பில் மட்டுமல்ல, நாட்டுக்கென்று இருக்கின்ற சில கலாச்சாரங்களையாவது அவர்கள் தெரிந்திருக்க வேண்டும்.. குடும்ப அமைதிக்குத் தேவையான சில கட்டுக் கோப்பை , நாகரீகப் போக்கில் அழிந்துவிடாமல் பாதுகாக்கப் படவேண்டும். எதிர்கால சந்ததிக்கு இதனைப் பக்குவமாக எடுத்துச் சொல்ல வேண்டும். அறிவுரைகள் யாருக்கும் பிடிக்காது. வழிகாட்டுகின்ற பெரியவர்களும் தங்களை அதற்குத் தகுதியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
என் நினைவலைகளின் பயணத்தில் பல காட்சிகள் காணலாம். காலச் சக்கரத்தின் சுவடுகளை ஒதுக்கித் தள்ளக் கூடாது. நான் ஏற்கனவே சொன்னதுபோல் என் பயணம் ஒரு த்ரில்லர் பயணம். அடுத்துவரும் காட்சியிலேயே சில அதிர்ச்சி காட்சிகளைப் பார்க்கலாம்.
அடுத்து சந்திப்போம்.
சீதாலட்சுமி

நினைவலைகள் -1
எழுதியவர்: திருமதி சீதாலட்சுமி to இல்லம்
கடற்கரை
ஆழ்கடலைப் பார்த்துக் கொண்டு நின்று கொண்டிருந்தேன். கால்களை வருடிச் செல்லும் அலைகள். கொஞ்சம் உள்ளே சென்றால் முட்டித்தள்ளும் பெரிய அலைகள். சட்டென்று ஓர் அச்சம். மரத்தளவையும் தாண்டி ஆவேசத்துடன் வந்து உயிர்களை அள்ளிச் செல்லும் ஆழிப் பேரலகளின் நினைவுகள் பயமுறுத்தின. அலைகளின் தான் எத்தனை வகைகள்!
மனிதனின் நினைவலைகளும் அப்படியே. முத்தும் பவளமும் விளையும் கடலில் சுறாவும் இருக்கின்றது. மனித அனுபவங்களும் அப்படியே. நான் சுய சரிதம் எழுதவில்லை. காலத்தின் சுவடுகளை அடையாளம் காட்டுகின்றேன், நினைவுகளைத் தூசி தட்டுகின்றேன்.
எனக்குப் பிடித்த பத்திரிகை உலகைப் பற்றி சில வார்த்தைகள் கூறிவிட்டு பயணம் செல்வோம். பல உண்மைகள் வியப்பைத் தரும். சில அதிர்ச்சி தரும். நான் வாழும் காலத்திலேயே உண்மைகளை எப்படியெல்லாம் தடம்புரட்டிக் காட்டுகின்றார்கள் என்பதைப் பார்த்து வேதனைப் படுவேன். என்னால் முடிந்தது சிலவற்றையாவது பதிவு செய்து விட வேண்டும். என்ற நோக்கத்தில் இந்தப் பயணம்.
பத்திரிகையுலகில் மூவரை யாரும் மறக்க முடியாது. மறக்கவும் கூடாது. ரிக்க்ஷாகாரனையும் படிக்க வைத்த பெருமைக்குரியவர் .சி.ப ஆத்திதனார் அவர்களாகும். கவனத்தை ஈர்க்கும் தலைப்புகள், செய்திகளை எவ்வாறு சுவையாகத் தருதல், எத்தகைய செய்திகள் பாமரனுக்குத் தேவை என்ற நோக்கங்களைக் கொண்டு அவைகளுக்குத் தனிப் பயிற்சியும் கொடுத்தவர். பின்னர் தாம் மாணவர்களுக்கு பயிற்சி விகடனில் தொடங்கப் பட்டது. எஸ்.எஸ். வாசன் அவர்கள் தன் விருப்பங்களைப் புகுத்தி வாசகர்களைப் படிக்க வைத்தவர். சகலகலா வல்லவர். பெரும் சாதனையாளர். விமர்சனங்களை ரசிக்கும் படி செய்தது விகடன். பொருத்தமான எழுத்தாளர்களைக் கொண்டு எழுத வைத்தவர். விகடன் பல புகழ்பெற்ற எழுத்தாளர்களுக்குத் தாய்வீடு. கல்கியின் விமர்சனங்கள் பேசப் பட்டன. அந்த அனுபவப் பட்டறையிலிலிடுந்து வெளியேறி கல்கி பத்திரிகை தொடங்கி இன்றும் தனக்கு நிகர் யாருமில்லாத அளவு சுவையான பல படைப்புகளைத் தந்திருக்கின்றார்.
பொன்னியின் செல்வனைப் படம் பிடிக்க பலர் முயன்றனர். முடியவில்லை. ஆனால் மாஜிக் லாண்டர்ன், குமரவேல் உதவியுடன் நாடகமாக்கி சென்னையில் நடத்தினர். அந்த நாடகத்திற்கு கமல், ரஜனி இருவரும் வந்து, உட்கார்ந்து முழுமையாக நாடகம் பார்த்தனர். நாடகம் முடியவும் கமல் அரங்கத்திற்குப் பின் சென்று நடிகர்களை பாராட்டி பேசினார். அப்பொழுது அவர் சொன்ன ஒன்றை உங்களுக்குக் கூற விரும்புகின்றேன்.
“என்ன டிக்கெட்டே கிடைக்கல்லியாமே. அக்ரஹாரத்து மாமிகள் மூணு நாளும் தொடர்ந்து வந்திருப்பா. கல்கி கிறுக்குகள்“
மறுக்க முடியாத உண்மை. அடுப்பங்கரை வரை பத்திரிகைகள் போனது விகடன் ஆரம்பித்து வைத்த சாதனை. இப்பொழுது அடுப்பங்கரையும் மறக்க வைத்துக் கொண்டிருக்கின்றது தொலைக்காட்சி சீரியல்கள்.
அடுத்து வந்த தேவன் இன்னொரு பாணியில் சென்றார். நகைச் சுவைப் படைப்புகள். கல்கி விமர்சனங்களில் குறும்பும், நகைச்சுவையும் இருக்கும். விகடனின் முத்திரையே சிரிப்பு முகம். விசிறி வாழை எழுதிய அதே சாவி வாஷிங்டன் திருமணம் படைத்து உலகில் வாழும் தமிழ் மக்களை சிரிக்க வைத்தார். அதில் மயங்கிய அமெரிக்காவாழ் தமிழ் மக்கள் விடுத்த அழைப்பில் சாவி போக முடியாததும் மணியன் போனதும் நடந்தவைகள். சாவிக்காக வருந்தினாலும் பயணக் கட்டுரை எழுத ஒரு புதியவனைத் தோற்றுவித்து விட்டது கொஞ்சம் சமாதானம். தெற்கு வளர்கிறதின் மூலம் சமுதாயப் பணிகளையும் பத்திரிகையில் படம் பிடித்துக் காட்டப்பட்டன. குறள் கதைகளால் வாழ்க்கையின் சிறப்பு சொல்லப்பட்டது.
அன்று பெண்களுக்கு, டாக்டர் லட்சுமியின் கதைகள் விருப்பமானது. சிந்தனைக்கு ஜெயகாந்தன், சுஜாதாவின் ஜீனோ, சிவசங்கரியில் பல கதைகள், இந்துமதியின் தரையில் இறங்கும் விமானங்கள், சொல்லிக் கொண்டே போகலாம். அதுவே ஒரு நீண்ட தொடராகிவிடும். என் நோக்கம் வேறு. வாசன் அவர்கள் பல்நோக்கில் வாசகர்களை இட்டுச் சென்றார் என்பது உண்மை.
எங்களைப்போல் ஆரம்ப நிலையில் இருந்தவர்களுக்குப் பிரசண்ட விகடன் நுழை வாயில் என்றால் விகடன் எங்கள் இலக்கு. கதைகளுக்கு சன்மானம் கொடுத்து வந்தது சில பத்திரிகைகள் தான். ஒரு வேலையைக் கையில் வைத்துக் கொண்டு எழுதுகின்றவர்கள் இப்பொழுது அதிகம். அக்காலத்தில் எழுத்தை நம்பி இருந்தவர்கள் பலர். ஒரு கதைக்கு 15 ரூபாய் கிடைக்கும். விகடனில்தான் அதிகம் கொடுத்தார்கள் அதுவும் முத்திரைக் கதைக்கு 101 ரூபாய். ஒரு கதை முத்திரை பெற்று விட்டால் போதும், எழுதியவனுக்கு மலர்க் கிரீடம் சூட்டப்பட்டது போல் மகிழ்ச்சி ஏற்படும். மணியன் விகடனிலிருந்து விலகி இதயம் பேசுகிறது ஆரம்பித்தார். குங்குமம், சாவி பத்திரிகைகளும் அந்தக் காலத்தை ஒட்டி வெளியாகி இருந்தன. ஒரு நாள் குங்குமம் அலுவலகம் சென்றிருந்தேன். முரசொலி மாறனுக்கு என் நண்பர்கள் வட்டம் தெரியும். அதிலும் மணியன் என் குடும்ப நண்பர் என்றும் தெரியும். அப்பொழுது அவர் என்னிடம் சொன்னது. “எனக்கு போட்டி இதயம் பேசுகிறது, சாவியல்ல. விகடனும், குமுதமும் என் இலக்கு.“ என்றார்.
அடுத்து எஸ்.ஏ.பி. அவர்கள். வாரப் பத்திரிகையும் பாமரரைப் படிக்க வைத்தவர். தமிழகத்தில் அதிக லட்சங்களில் விற்பனையான வாரப் பத்திரிகை குமுதம். அவருக்கு ஒரு சிறந்த படை அமைந்தது. ரா.கி. ரங்கராஜன், ஜ.ரா சுந்தரேசன், புனிதன், அரசியல் நிருபர் பால்யூ இன்னும் சிலர். ஒவ்வொரு இதழும் ஒரு துணை ஆசிரியரின் பொறுப்பு. வாரம்தோறும் கூட்டம் போட்டு விவாதிப்பார். வாசகர்கள் கடிதங்கள், விற்பனையில் ஏற்ற இறக்கங்கள் விவாதிக்கப் படும். குறை கண்டால் உடனே மாற்றிவிடுவார். அதில் வரும் ஒவ்வொரு எழுத்தும் அவர் பார்வையில் தப்பாது. சரியான பத்திரிகை வியாபாரி. சாண்டில்யன் குமுதத்தின் சமஸ்தான வித்துவான். அவர் கதையில் சிருங்கார ரசம் கொஞ்சம் தூக்கலாக இருக்கும். விமர்சிப்பவர்கள் கூடப் படிப்பார்கள். அவர் தொடர் ஆரம்பித்தால் ஒரு லட்சம் விற்பனையில் கூடும்.லதாவின் குண்டுக் கண்கள் பெண்களும் அவர் கதைகளுக்குத் துணையாக இருந்தன.
இந்த மூவர் பத்திரிகை உலகின் ஜாம்பவான்கள். எனவே இவர்களைப் பற்றி மட்டும் எழுதினேன். பத்திரிகை வரலாறு என்றால் ஏனைய பத்திரிகைகளையும் எழுதப் பட்டிருக்க வேண்டும்.அது என் நோக்கமும் அல்ல/ ஆனாலும் என் பயணத்தில் பல பத்திரிகைகள் எட்டிப் பார்ப்பார்க்கும்.
வாழ்க்கை மாறுதல்களுக்கேற்ப எழுத்துக்களும் அமையும். பழையன கழிதலும், புதியன புகுதலும் நம் இலக்கணம் கூறியதே அச்சம் மடம், நாணம் பயிர்ப்பு நான்கும் பெண்ணின் குணங்கள். இது நமது இலக்கணம். அவைகளை நாய்க்குத் துக்கி எரியச் சொன்னது பாரதி. பக்கத்தில் பத்தினிப் பெண் கேட்டான் பாரதி. கோரிக்கையற்று கிடக்கும் வேரில் பழுத்தபலா கண்டு இரங்கினான் அவன் தாசன். காலஓட்டத்தின் மாற்றம். இப்பொழுது இலக்கணக் குணன்களுடன் இருந்தால் சென்னையில் டவுன்பஸ்ஸில் பெண் போக முடியுமா? எத்தனை உரசல், இடியல். விண்ணிலே பறந்த கந்தர்வனை ரசித்ததற்காக பரசுராமனின் தாய் ரேணுக்கவின் தலை துண்டிக்கப்பட்டது. அந்த இலக்கணப்படி என்றால் இக்காலத்தில் தலையில்லா முண்டங்கள் நிறைய உலாவும். சினிமா நடிகர்களை ரசிக்கும் பெண்களின் கதி அப்படி ஆகி இருக்கும். மாற்றங்கள் முதலில் பிடிக்காது. அதுவே பழகி விட்டால் அது புதுக் கலாச்சாரமாகிவிடும். உலகம் எப்பொழுதும் போல்தான் சுழன்று கொண்டிருக்கின்றது. ஆனால் மனிதனின் பழக்க வழக்கங்கள் மிகவும் வேகமாகச் சுழன்று கொண்டிருக்கின்றன. அந்த வேகத்தில் பழமைவாதிகள் தள்ளாடுகின்றோம். வருந்துகின்றோம் அடுத்து நாடகம் பார்க்கலாம். மீண்டும் வருவேன்.
குறிப்பு:
என் எழுத்துக்களில் பிழைகள் வரலாம். கணினிப் பயிற்சி கிடையாது. நடுங்கும் ஒற்றைவிரல் நாட்டியம். தயவு செய்து மன்னிக்ககும் படி வேண்டிக் கொள்கின்றேன். வயதான இக்கிழவியைப் பொறுத்துக் கொள்ளுங்கள்.

Subscribe to:
Comments (Atom)